
ஜெயங்கொண்டம், மார்ச் 18: 10.5 சதவீத இட ஒதுக்கீடு தேர்தலுக்காக நடத்தும் நாடகம் என காடுவெட்டி குரு மகன் கனலரசன் கூறினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் காடுவெட்டி குருவின் மனைவி ஸ்வர்ணலதா, ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் கலைவாணனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது குருவின் மகன் கனலரசன். ரவி பச்சமுத்து உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அப்போது காடுவெட்டி குரு மகன் கலையரசன் அளித்த பேட்டி: காடுவெட்டியாருக்கு இழைத்த துரோகத்திற்கு சரியான பதிலடி இது. 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த ஒரு தலைவருக்கு நன்றி கடனாக அவரது பெயரையோ,படத்தையோ உபயோகப்படுத்தவில்லை.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒரு சிலரால் தேர்தலுக்காக நடத்தும் நாடகம். பொதுமக்களிடத்தில் காடுவெட்டி குருவுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும், பல வருடங்களாக தூர்வாரப்படாத பொன்னேரியை தூர்வாரி அதில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.