
ஜெயங்கொண்டம், மார்ச்18: ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் தமிழக வரைபட வடிவில் நின்று விரலைக்காட்டி 100 சதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் தமிழக எல்லை வடிவில் நின்று100 சதம் வாக்களிக்க கோரி ஒரு விரல் கையை காட்டி அனைவரும் 100 சதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதல்வர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டுஒரு விரலை காட்டி 100 சதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார். இறுதியில் கல்லூரியில் முதல்வர் திருவள்ளுவன் நன்றி கூறினார்.