சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இதுவரை 18 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி இருக்கிறது.
அதே நேரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 சதவீதம் குறைவாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 59 சதவீதம் குறைவாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 சதவீதம் குறைவாகவும் பருவமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ தாக்கம் காரணமாக, தென்னிந்தியப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவைவிட பருவமழை பொழிவு குறைந்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
