- அய்யனார் கோவில் புரவி எழுச்சி திருவிழா
- பொன்னமராவதி
- தேனூர் அடைக்கலம்காத்தார் அய்யனார் கோவில் புரவி எழுச்சி திருவிழா
- தேனூர் ஸ்ரீ அடைக்கலம்காத்தார் அய்யனார் கோவில் புரவி எழுச்சி திருவிழா
- புதுக்கோட்டை
பொன்னமராவதி, ஜுலை 31: பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் அடைக்கலம்காத்தார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் ஸ்ரீஅடைக்கலத்காத்தார் அய்யனார் கோயில் புரவி எடுப்புத் திருவிழா நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு செம்பூதியில் செய்துவைக்கப்பட்டிருந்த குதிரை மற்றும் பரிவார தெய்வச்சிலைகளை கடந்த 29ம் தேதி சுமந்து எடுத்துச்சென்று தேனூர் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகளை நேற்று 30ம் தேதி அங்கிருந்து அடைக்கலம் காத்தார் கோயிலுக்கு எடுத்துச்சென்று அங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் தேனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் பங்குபெற்றனர்.
