கந்தர்வகோட்டை, ஜூலை 31: கந்தர்வகோட்டை பகுதிகளில் அலறும் காற்று ஒழிப்பான் சத்தத்தால் பொதுமக்கள் நோயாளிகள் கடும் அதிர்ச்சியடைகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கடைவீதி பகுதிகளில் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, அரசு மருந்துவமனை, மற்றும் கடைவீதி உள்ள பகுதியில் அதிக ஒலி எடுக்கும் காற்று ஒழிப்பானால் பொதுமக்களும் வியாபாரிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் நோயாளிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் போக்குவரத்து அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் ஆய்வுசெய்து அதிக சத்தத்தை எழுப்பும் காற்று ஒழிப்பான்களை அகற்ற வேண்டும். அது போல் உள்ள வாகனங்களுக்கு உரிய அபதாரம் விதிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
