- ஓய்வூதியம் சங்கம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் பனகல்
- தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்கம்
- மாவட்டத் தலைவர்
- ராஜாராமன்
- மாவட்ட பொருளாளர்
- மோகன்
தஞ்சாவூர், ஜூலை 30: தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில மகளிர் துணைக்குழு நிர்வாகி செல்வி, ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்ட செயலாளர் அஜய்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் நிறைவுறையாற்றினார். வட்டத் துணைத் தலைவர் தர் நன்றி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீடு திட்டம் பழைய காப்பீடு திட்டத்தில் இருந்த எந்த குறைபாடுகளுக்கும் தீர்வு காணாமல் அதற்கு மாறாக எவ்வித பயனும் அற்ற வெற்று காப்பீடு திட்டமாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான சந்தா தொகையும் கட்டாயமாக்கப்பட்டு மாதம் ரூபாய் 497 இல் இருந்து ரூபாய் 644 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் காசி இல்லா மருத்துவ சிகிச்சை என்பதை பேக்கேஜ் ரேட் பேஸ்ட் ட்ரீட்மென்ட் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளாக இருந்தாலும் முழு தொகையும் செலுத்தி தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. எந்த நோக்கத்திற்காக காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டதோ அது நிறைவேறாது. எனவே இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்ட அரசாணையை உடனடியாக திரும்பப் பெற்று ஓய்வூதியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திருத்திய அரசாணையை வழங்கிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
