- டிஐஜி
- சமாஜ்வாடி
- ஆடிக்கிருத்திகை விழா
- திருத்தணி
- ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா
- திருட்டானி முருகன் கோயில்
- இறைவன்
- முருகன்
திருத்தணி, ஜூலை 30: திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவில் பங்கேற்க உள்ள பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த ஏற்பாடுகடள டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில், வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. விழாவில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி முருகன் கோயிலில், குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா தொடங்க 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திருவள்ளூர் எஸ்.பி. சாய் பிரினீத் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மலைக்கோயிலில், காவடி மண்டபத்தில் பக்தர்கள் காவடிகள் செலுத்தும் மண்டபத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், மாட வீதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மலையில் போக்குவரத்து நெரிசல் தடுக்க மலை அடிவாரத்தில் வாகன நிறுத்துமிடம் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நல்லான் குளம், புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், டவர்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது ஏஎஸ்பி ஷுபம் திமான், உட்பட போலீசார் உடனிருந்தனர்.
