×

ஒட்டன்சத்திரத்தில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு

 

ஒட்டன்சத்திரம், ஜூலை 30: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட திண்டுக்கல் பழனி சாலையில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கி வந்த தண்ணீர்தர்மம் என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான 8.39 ஏக்கர் நிலமானது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த கால திமுக அரசு மீட்டெடுத்து, அந்த இடத்தில் தற்போது ரூ.22 கோடி செலவில் அருள்மிகு  பழனியாண்டவர் மகளிர் கல்லூரி கட்டிடம் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. அதனை அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தநிகழ்வின் போது நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், கல்லூரி முதல்வர் வாசுகி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட பிரதிநிதி சிவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Tags : MLA ,Ottanchathiram ,Tanhir Dharmam ,Hindu Religious and Charitable Endowments Department ,Dindigul Palani Road ,Ottanchathiram Municipality ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...