×

லால்குடி வே.துறையூர்-சிறுமருதூர் இடையே டாஸ்மாக் திறக்க அனுமதிக்கக் கூடாது

 

திருச்சி, ஜூலை 28: லால்குடி வட்டம் வே.துறையூர் மற்றும் சிறுமருதுார் இடையே டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி அந்த கிராம மக்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்ட லால்குடி வட்டம், சிதம்பரம் பைபாஸ் சர்வீஸ் ரோடு அருகேயுள்ள வே.துறையூர்-சிறுமருதூர் இடையே உள்ள கட்டடிடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் திறந்தால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், வே.துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பு, இன்னல்கள் மற்றும் இடையூறுகளை சந்திக்க வேண்டி வரும்.

இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அந்த வழியில் செல்ல அச்சம் ஏற்படும் சூழலும் உருவாகும். இப்பகுதியில் ஏற்கனவே இரவு நேரங்களில் வழிபறி நடந்த சம்பவங்களும் பல உண்டு. இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பலமுறை தெரிவித்துள்ளோம். இச்சூழலில் இந்த இடத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறந்தால் மது பழக்கம் உள்ளவர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் எங்கள் பகுதி இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி எதிர்கால வாழ்க்கை சீரழியவும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்ககூடாது என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ரேசன் பொருட்கள் பெறுவது தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் போன்று, மாதந்தோறும் ஆவின் பால் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி குறைகளை களைய வேண்டும்

Tags : Lalgudi Village Council ,TASMAC ,Duraiyur ,Sirumarudur ,Trichy ,Lalgudi Taluk ,Trichy District Collector ,District… ,
× RELATED சமயபுரத்தில் 800 போதை மாத்திரைகளுடன் பெண் கைது