×

கல்லிடைக்குறிச்சி அருகே ரயில் பெட்டி மீது கல்வீச்சு

 

நெல்லை, ஜூலை28: நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் இருந்து கடந்த 26ம் தேதி இரவு செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. கல்லிடைக்குறிச்சி தாண்டி சென்ற போது ரயில் பெட்டி மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பயணி ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து ரயில் இரவு 9 மணிக்கு தென்காசி சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில் பயணிகள் தென்காசி ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து ரயில் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags : Stones ,Kallidaikurichi ,Nellai ,Nellai Junction ,Sengottai ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...