ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. உதம்பூர் மாவட்டம் தேவல் பகுதியில் முக்கிய போக்குவரத்து வழித்தடமான ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டதால் உதம்பூர் மற்றும் பனிஹால் இடையே சுமார் 1,700 சரக்கு லாரிகள் மற்றும் ஏராளமான பயணிகளின் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. தொடர்ந்து சாலைகள் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.
