கேரளத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது: ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யும்

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்தபோதிலும் ஒரு சில வாரங்களில் மழையின் தீவிரம் குறைந்தது. கடந்த சில வாரங்களாக கேரளத்தில் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரித்தது. வழக்கமாக ஆடி மாதத்தில் இடைவிடாது மழை பெய்யும். ஆனால் அந்த நிலைமை மாறி கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.

கண்ணூர், காசர்கோடு உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு மழை பெய்தது. இந்தநிலையில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
ஆகவே ஆகஸ்ட் 1ம் தேதி வரை கேரளத்தில் பரவலாக மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று எர்ணாகுளம், திருச்சூர் உள்பட 6 மாவட்டங்களுக்கும், 29ம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, உள்பட 7 மாவட்டங்களுக்கும், 30ம் தேதி இடுக்கி, மலப்புரம், வயநாடு உள்பட 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: