×

பெருகிவரும் மக்கதொகைக்கு ஏற்ப நீர்த்தேக்க தொட்டியை அகலப்படுத்த வேண்டும்: மணப்பாறை நகராட்சி மாஜி கவுன்சிலர் கோரிக்கை

 

மணப்பாறை, ஜூலை 27: பெருகிவரும் மக்களை தொகைக்கு ஏற்ப நீர்தேக்க தொட்டியை அகலப்படுத்த வேண்டும் என்று மணப்பாறை நகராட்சி மாஜி கவுன்சிலர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து முன்னாள் நகராட்சி கவுன்சிலர் விபி சங்கர், எம்.எல்.ஏ கதிரவனிடன் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். தனித்தனியாக அளித்துள்ள 4 மனுக்களில், முதலாவதாக மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள சுமார் 1.55 ஏக்கர் நிலம், நகராட்சிக்கு சொந்தமானதாக 1978 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டும், இதுவரை நகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் அந்த பகுதியினை எடுக்க தவறிவிட்டதாகவும், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் நிலம் இதுவரை நகராட்சி கட்டுப்பாட்டிற்கு வரவில்லை, அப்பகுதியினை நகராட்சி வசமாக்கி நகராட்சியின் வருவாய் பெருகிட வணிக பயன்பட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும், இரண்டாவதாக வாகன போக்குவரத்தின் நெரிசலை குறைக்கவும், பொதுமக்களில் நலன் கருதியும் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து கோவில்பட்டி சாலை தியாகேசர் ஆலை வரை உள்ள பிரதான சாலையை அகலப்படுத்தி, சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கவும் வேண்டுமெனவும்,

இது காலை 7 மணி முதம் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலுமான பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் சிரமத்தை குறைக்கும் என்றும், மூன்றாவதாக பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சிக்கு சொந்தமான ரிசர்வாயர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் 6, 7, 12, 13, 14 ஆகிய 5 வார்டு பொதுமக்கள் சுமார் 1400 குடிநீர் இணைப்புகள் மூலம் பயனடைந்து வருவதாகவும், இது 1979-ல் கட்டப்பட்டு 1980 முதல் 1995 வரை 15 ஆண்டுகள் உப்பு தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், 1995 முதல் காவிரி குடிநீர் தேக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாகவும், தற்போதைய பொதுமக்களின் தேவையறிந்தும் வருங்கால் தேவையை கருத்தில் கொண்டும் புதிதாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைத்து தரவும், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை 1969-ல் அன்றைய நகர் மன்றத்தால் அமைக்கப்பட்டதாகவும், 57 ஆண்டுகள் ஆன நிலையில் சிலையும், சிலை பீடமும் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், அண்ணா சிலையை முழு உருவ சிலையாக நகராட்சி அலுவலகத்தில் அமைக்கவும் வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

 

Tags : Manapparai ,Municipality ,Councilor ,Manapparai Municipality Councilor ,MLA ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது