×

மருத்துவமனை சூறை போலீஸ்காரர் கைது

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலையத்தில் தங்கபாண்டி (40) போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அதிக போதையில் பணி நேரம் முடிந்த பின்பு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு இரவு பணியில் இருந்த சேகரிடம் இருந்த வாக்கி டாக்கியை வலுக்கட்டாயமாக பறித்து எதிர்திசையில் இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசி சண்டையிட்டுள்ளார்.

அப்போது வாக்கி டாக்கி தொடர்பில் போலீஸ் உயரதிகாரிகளும் இருந்துள்ளனர். தொடர்ந்து தங்கபாண்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்து அண்ணா சாலையில் உள்ள ஒரு பெட்டி கடையில் நின்று சிகரெட் பிடித்தாவறு, ஒரு சமுதாய பெயரை கூறி விமர்சனம் செய்து தள்ளாடி கொண்டிருந்தார். தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த செவிலியர் மீனாவிடம் தனக்கு சிகிச்சை பார்க்க கூறியுள்ளார்.

அதற்கு செவிலியர் போதையில் இருப்பதால் சிகிச்சை பார்க்க இயலாது என கூறியுள்ளார். இதனால் தங்கபாண்டிக்கும், செவிலியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மருத்துவமனையை சூறையாடி உள்ளார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் பொன் ரதி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தங்கபாண்டியை கைது செய்தனர்.

Tags : Kodaikanal ,Thangapandi ,Kodaikanal police station ,Dindigul district ,Shekar ,
× RELATED கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்...