கேள்விக்குறியாகும் சம்பா சாகுபடி திருவாரூரில் ஆக.1ல் வறட்சி மாநாடு: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்தாண்டு 6 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றது. அந்த நெற்பயிர்களுக்கும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறாமல் பாலைவனமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரையில் தென்மேற்கு பருவமழை தொடங்காதது மற்றும் மேட்டூர் அணையில் உரிய நீர் இல்லாததன் காரணமாக சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனையொட்டி வறட்சி மாநாடு திருவாரூரில் ஆக.1ம்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான முதன்மை விஞ்ஞானி ரவிசங்கர், ஐஐடி இயக்குனர் காமகோடி,

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன், வானிலை ஆராய்ச்சி முன்னாள் இயக்குனர் ரமணன், விவசாயத்துறை அமைச்சர் வினோத் விஜய், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் எல்நினோவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், உணவு பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான கருத்துக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: