×

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

 

தூத்துக்குடி, ஜூலை 20:தூத்துக்குடியில், சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி எட்டயபுரம் சாலைப் பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, எட்டயபுரம் சாலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த அப்துல்கனி மகன் முகமது இஸ்மாயில் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thoothukudi ,Liquor Enforcement Division ,Ettayapuram Road ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...