தவெக அரசின் ரெஸ்டோபார் மது திட்டம் தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

சென்னை: தவெக அரசின் ரெஸ்டோபார் மது திட்டம் தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: தேசிய பாடலான வந்தே மாதரத்தை மறுத்தால் அல்லது அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்கின்ற மசோதாவை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

ஒன்றிய பாஜ அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். உணவு உண்டு கொண்டே மதுபானம் குடிப்பது போன்ற ரெஸ்டோ பார்கள் வட இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இது போன்றவற்றை தமிழகம் முழுவதும் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசாங்கம் வழங்கப் போகிறது என்கின்ற செய்தி வந்து உள்ளது. இது தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும். கொஞ்சம் நஞ்சம் நல்லவர்களையும் நாசமாக்கிவிடும். இந்த பார்களை அனுமதிக்க கூடாது.

Related Stories: