×

இடைத்தேர்தலில் தனி அணி மார்க்சிஸ்ட் சண்முகம் தகவல்

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் திருவாரூரில் நேற்றிரவு அளித்த பேட்டி:தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தனி அணியாக செயல்படுவதென தீர்மானித்துள்ளோம். இடதுசாரிகளால் தான் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.கர்நாடகா தண்ணீர் திறந்து விடாத நிலையில், ஏற்கனவே பற்றாக்குறை தண்ணீர் பகிர்வு குறித்து உச்சநீமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையில் தமிழகத்திற்கான தண்ணீரை பெற தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையமும் தண்ணீர் பெற்று தர ஆவண செய்ய வேண்டும்.

நாகர்கோவில் சபரிவர்மன் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை. கைது நடவடிக்கை நடந்துள்ளது. அதனால் சிபிஐ வந்து எதையும் புதிதாக கண்டுபிடிக்க போவதில்லை. இக்குற்றத்தில் அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். இந்த மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டுமென முதல்வரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்பதை தெளிவாக தெரிவித்துள்ளோம். எக்காரணம் கொண்டும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Marxist Sanmugham ,THIRUVARUR ,MARXIST COMMUNIST SECRETARY OF STATE ,SANMUGAM ,Karnataka ,
× RELATED நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில்...