×

மருத்துவமனையில் லாலு பிரசாத்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று முன்தினம் ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதால் உடனடியாக பாட்னாவில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவர்கள் விரிவான பரிசோதனையை மேற்கொண்டனர். அவரது உடல்நிலை சீரான பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து அவரது மகள் மிசா பாரதி கூறுகையில்,‘‘மேல் சிகிச்சைக்காக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட இருக்கிறார். டெல்லிக்கு செல்வதற்கு முன் அவர் வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்’’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Lalu Prasad ,Patna ,Rashtriya Janata Dal ,Lalu Prasad Yadav ,
× RELATED பெரியபாளையத்தில் பரபரப்பு பவானி...