வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

பெரம்பலூர்,ஜூலை.18: வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 4 மணிநேரம் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் சிக்கவில்லை. கணக்கில் வராத ஐி.பே மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.26,800 கண்டு பிடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 5மணி அளவில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா மற்றும் போலீசார் உள்பட 5 பேர்கள் அடங்கிய குழுவினர் உள்ளே நுழைந்து, மெயின் கேட் உள்ளிட்ட கதவுகளை சாத்திவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 9மணி வரையென 4 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஐி.பே மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.26,800 கண்டறியப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுமாலை வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த சோதனையால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: