×

தா.பழூரில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தா.பழூர், ஜூலை. 18: அரியலூர் மாவட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தா.பழூர் கிழக்கில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வட்டார தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் மாரியம்மாள், மகிளா காங்கிரஸ் தலைவர் கல்யாணசுப்பிரமணியம், பூங்கொடி , கண்ணையன், முனுசாமி, இளையபெருமாள், குருநாதன் உட்பட மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் உட்பட்ட 50 க்கும் மேற்பட்டோர் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக இயக்கத்தில் கையெழுத்து இட்டனர்.

 

Tags : Tha.Pazhur. ,Tha.Pazhur ,Tha.Pazhur East ,Tamil Nadu Congress ,Ariyalur District ,Tamil Nadu Congress Committee ,Chakravarthy ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...