சிங்கப்பெண் எஸ்ஐயிடம் விசிலடித்து வாலிபர் சேட்டை

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு சிங்கப்பெண் போலீஸ்படை எஸ்ஐ பிரபாவதி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரமாக நின்றிருந்த சிங்கப்பெண் படை போலீஸ் எஸ்ஐ பிரபாவதியிடம், அங்குவந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் விசில் அடித்து கேலி செய்து சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வாலிபர் போதையில் இருந்தை அறிந்துகொண்ட சிங்கப்பெண் போலீஸ் படை உடனே அருகில் உள்ள விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திலீப்குமார்(28) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சென்ற சிங்கப்பெண் போலீஸ்படை எஸ்ஐயிடமே போதை வாலிபர் விசில் அடித்து சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: