பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மைபணியாளர் பலி

ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு செல்ல பரங்கிமலை பட்ரோடு வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது, கிண்டி நோக்கி வேகமாக வந்த ஆட்டோ, ராஜேஸ்வரி மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிண்டியில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிண்டி லேபர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரசுராம் (34) என்பவரை கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: