×

வேப்பூர் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணர்வு முகாம்

குன்னம், ஜூலை 16: குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வேப்பூர் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு குறித்தான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகரன் தலைமை தாங்கி ராகிங் தடுப்பு சட்டங்கள் மற்றும் தண்டணைகள் குறித்து பேசினார்.

கல்லூரி முதல்வர் மணிமேகலை முன்னிலை வகித்தார். ஆசிரியைகள் ரோஸ்லின் கீதா, பொன்னரசி ஆகியோர் வரவேற்றனர். இணை பேராசிரியர் ராஜேந்திரன், குன்னம் பார் கவுன்சில் பொருளாளர் அன்புதமிழன், கே.என். ராமசாமி மற்றும் அழகேசன், இனியவன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags : Veypur Government College ,Kunnam ,Veypur Government Arts and Science College for Women ,Kunnam District Legal Services Committee ,Legal Services Committee ,District Legal ,
× RELATED 4 பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்:...