நொய்டா: நொய் உபி மாநிலம் நொய்டா அருகே மமுரா என்ற பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் தரைதளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று திடீரென தீப்பற்றி கட்டிடம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ காரணமாக கட்டிடத்தில் இருந்த 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள், சிக்கிக்கொண்டிருந்த குடியிருப்பில் இருந்த 50 குடும்பங்கள் வெளியேற்றி, தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜிங் செய்து கொண்டிருந்த போது தீப்பொறி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மூச்சு திணறி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
