‘தனது வாழ்நாள் முழுவதும் தேச கட்டமைப்புக்காக அர்ப்பணித்த காமராஜரை நினைவுகூர்கிறேன்’ – காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம்

இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் தூணாக இருந்தவர் காமராஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த போராளி, சிறந்த மக்கள் தலைவர் காமராஜர். தனது வாழ்நாள் முழுவதும் தேச கட்டமைப்புக்காக அர்ப்பணித்த காமராஜரை நினைவுகூர்கிறேன். கல்வி, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஏழை மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: