×

யார் களவாணி, நாங்களா.!! அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற MLA-க்களை களவாடுவது நீங்க தான்..

சேலம்: தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா என்பதே பெரும் சந்தேகமாக இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் தான் அதிமுக என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எங்கு எப்போது பேசினாலும் முதல்வர் விஜய் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். கரூரில் பேசிய முதல்வர் திமுக – அதிமுகவை கூட்டு களவாணிகள் என்றார். ஆனால் எங்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை திருடி, தனது கட்சியில் இணைத்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் உண்மையில் களவாணி என்று கடுமையாக சாடினார். நாலாந்தர பேச்சாளரின் போல் தான் கரூரில் விஜய் பேசியது இருந்தது.

தேர்தலுக்கு முன் 2 திராவிட கட்சிகள் சரியில்லை, ஆதலால் மாற்று சக்தி நான் என்று முழங்கிய முதல்வர் விஜய் அதில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியையே பிடித்து உள்ளார். அப்படி என்றால் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா! என்று கேள்வி எழுப்பினார். 60 நாட்கள் ஆட்சியில் தவெக ஒன்றுமே செய்யவில்லை, ஆக்கப்பூர்வ வேலை எதுவும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக்களை தான் பேசி வருகிறார் என்று கடுமையாக சாடி உள்ளார்.

அதே போல சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோதான்; மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கி தான் தனது ஆட்சியை விஜய் நடத்தி கொண்டிருக்கிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும், விஜய்யின் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால் என்று சுட்டிகாட்டி உள்ளார்.காங்கிரஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் அந்த கட்சியின் நிலைமை, நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் தான் உள்ளது, திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவு-க்கு சென்று பதவி வாங்கியது தான் காங்கிரஸின் கொள்கையா என்று கேள்வி எழுப்பினார்.

Tags : Salem ,Tamil Nadu ,Secretary General ,Edappadi Palanisami ,Edappadi ,Palanisami ,
× RELATED அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54...