தஞ்சாவூர், ஜூலை 14: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், நேற்றும், இன்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்வதும், வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்க மறுப்பதுமாக இருந்து வருவது தொடர்பாக கடந்த 11ம் தேதி தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நேற்றும், இன்றும் (14ம் தேதி) ஆகிய இருநாட்கள், தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய வழக்கறிஞர் சங்கங்களின் வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி உள்ளதாக, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்திலும் நெல்மூட்டைகள் நனையாத வகையில் உறுதியான கட்டமைப்புடன் இந்த நெல் கொள்முதல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
