×

100 நாள் வேலை வழங்கிகாலதாமதம் இன்றி சம்பளம் தர வேண்டும்

பெரம்பலூர், ஜூலை 14: 100நாள் வேலைத்திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். எனவே 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொத்தவாசல் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட, கொத்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, சங்கீதா உள்ளிட்ட கிராமப் பொது மக்கள் திரண்டுவந்து அளித்தக் கோரிக்கைமனுவில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்த வாசல் கிராமத்தைச் சேர்ந்த எங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலையில், வெறும் 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். எனவே மற்ற ஊராட்சிகளைப் போல் எங்கள் கிராமமக்களுக்கு 100 நாட்கள் வேலைவழங்கி அதற்குரிய ஊதியத்தை கால தாமதம் இன்றி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என அந்தக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : PERAMBALUR ,Kottawasal ,Collector's Office ,Perambalur District Collector's Office ,
× RELATED ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை...