தேவாரம், ஜூலை 13: தேவாரம் பகுதியில், கப்பை கிழங்கு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. உத்தமபாளையம் வட்டாரத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் கப்பை கிழங்கு விவசாயம் நடந்தது. இதில் சுமார் 300 ஏக்கர் வரை கப்பை கிழங்கு விவசாயம் தேவாரம் மலையடிவாரத்தில் நடந்தது. இடைக்காலங்களில் கப்பை கிழங்கு விவசாயத்திற்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது.
காரணம் அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலும் கப்பை கிழங்கை பயிரிட ஆர்வம் விவசாயிகளிடம் இல்லை. இந்த விவசாயத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தோட்டங்களில் போர்வெல்களில் தண்ணீர் இருப்பது மிகவும் அவசியமாகும். பருவமழை, தொடர்ந்து பெய்தால் விவசாயம் அதிகரிக்கும். மேலும் பருவமழை தொடர்ந்து பெய்யும்போது கப்பை கிழங்கு விவசாயம் பரவலாக இருக்கும் என்பதால், இதனை ஊக்குவிக்க வேளாண்மை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
