×

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

தேவகோட்டை, ஜூலை 13: தேவகோட்டை காமாட்சி அம்மன்கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட் சிமெண்ட் உடைந்து எந்த நேரமும் விழும் நிலையில் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மின் வாரியத்திற்கு பலமுறை தெரிவித்தும் இன்னும் மாற்றப்படவில்லை.மழை காலம் நெருங்கும் வேளையில் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி ஆபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devakottai ,Devakottai Kamakshi Ammankoil ,Electricity Board ,
× RELATED சிறுமிக்கு தாலி கட்டியவர் மீது போக்சோ வழக்கு