- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- புதுக்கோட்டை
- விராலிமலை
- அன்னவாசல்
- அறந்தாங்கி
- கிராமப்புற வளர்ச்சி
- பஞ்சாயத்து துறை
புதுக்கோட்டை, ஜூலை 10: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் மற்றும் அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலாளர் பிரசாந்த் வாட்னேரே நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். . பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தெரிவித்தாவது: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல் மற்றும் அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
