×

விபத்துக்குள்ளான வேன் மீட்பு பணியின்போது அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

 

புதுக்கோட்டை, ஜூலை 10: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இளையாவயல் என்ற பகுதியில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், அப்பகுதியில் உள்ள பாலத்தின் சுவரில் மோதி பழுதாகி நின்றுள்ளது.
பழுதான இந்த வாகனத்தை மீட்பதற்காக, கீரனூர் கீழ்காந்தி நகரைச் சேர்ந்த பழுதான வாகனங்களை மீட்கும் வேன் உரிமையாளர் தேவராஜ்(42) என்பவர் அங்கு சென்றுள்ளார். அவர் வாகனத்தின் பின்புறம் நின்று வேனை மீட்க பார்வையிட்டு கொண்டிருந்தபோது, ஈரோட்டிலிருந்து காரைக்குடி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்தது அங்கு நின்று கொண்டிருந்த தேவராஜ் மீதும், பழுதாகி நின்ற சரக்கு வாகனத்தின் மீதும் அதிவேகமாக மோதியது. இதில் சிறிய ரக சரக்கு வாகனம் அப்படியே கவிழ்ந்த நிலையில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த வயலுக்குள் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Pudukottai ,Trichy ,Keeranur ,Ilayavayal ,Trichy-Karaikudi National Highway ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...