- காந்தி அருங்காட்சியகம்
- சுதந்திர தினம்
- உயர் நீதிமன்றம்
- மதுரை
- மதுரை காந்தி மியூசியம்
- காதீர்
- ஒதகாடை
- உயர்நீதிமன்றம்…
மதுரை, ஜூலை 10: புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு காத்திருக்கும் மதுரை காந்தி மியூசியத்தை, சுதந்திர தினத்திற்குள் திறக்க வாய்ப்புள்ளதா என, அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.மதுரையை அடுத்த, ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தமுக்கத்தில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகள் காந்தி மியூசியத்தை மூடி வைத்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர்.
