×

சிறுமிக்கு திருமணம்; 7 பேர் மீது வழக்கு

 

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மகளிர் ஊரக நல அலுவலர் அன்னபூரணிக்கு 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க உள்ளதாக சைல்டு லைன் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு திருமணத்தை ஏற்கனவே நடத்தி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுரை மாநகர் மகளிர் போலீசில் அன்னபூரணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்ட அலங்காநல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி(23), இவரது தந்தை பாலுகணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Annapoorani ,Madurai Thiruparankundram Panchayat Union Office ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...