×

வேடசந்தூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

 

வேடசந்தூர், ஜூலை 9: வேடசந்தூர் கோட்டம் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று வியாழக்கிழமை 11 மணியளவில் வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் முகாமில் பங்கேற்க உள்ளதால் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது மின் விநியோகம் சம்பந்தமான மற்றும் பொதுவான கோரிக்கைகளை, குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Vedasandur ,Vedasandur division ,Vadamadurai ,Dindigul ,Supervising Engineer ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்