பொன்னமராவதி, ஜூலை 9: பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் சூரியதேவ்(6) நேற்று மதிய உணவு இடைவேளையில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ெநல்லான் மகன் வேலு(32), வெள்ளையன் மகன் பாஸ்கர்(29) ஆகியோர் சிறுவன் கழுத்தில் கிடந்த வெள்ளி செயினை பறித்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வேலு, பாஸ்கர் ஆகிய இரண்டு நபர்களையும் விரட்டி பிடித்துள்ளனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
