×

பல வரலாற்று சான்றுகள் புதைந்து கிடக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத கோட்டைமேடு தீவு சுற்றுலா தளமாக மாற்றப்பட வேண்டும்

 

கொள்ளிடம், ஜூலை 9: கொள்ளிடம் அருகே ஆள் இல்லாத கோட்டைமேடு தீவு கிராமம் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுக்குள் நீரோட்டத்தின் நடுவில் இருக்கிறது கோட்டைமேடு தீவு கிராமம். காலம் காலமாக இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். சுமார் 15 வருடங்களுக்கு முன்புவரை மக்கள் குடியிருந்த இந்தக் கோட்டைமேடு என்னும் கிராமத்தில் தற்போது மனித நடமாட்டம் இல்லாமல் அவர்கள் வசித்த வீடுகள் இடிந்த நிலையில் உள்ளது. அங்கு இருந்த துவக்கப்பள்ளி அப்படியே இருந்து வருகிறது. இயற்கையை ஒட்டி அமைந்துள்ள கோட்டை ஐயா கோயில் மற்றும் ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்தவர்கள் வழிபட்டு வந்த மாரியம்மன் கோயில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

Tags : Kottaimedu Island ,Kollidam ,Kollidam River ,Mayiladuthurai district ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்