அக்கா மாதிரி நினைச்சு பேசுனத தப்பா நினைக்காதீங்க.. கீர்த்தனாவின் அரசு பள்ளி சோதனை பற்றி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை: அமெரிக்காவில் நடந்த உலக தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழாவில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, நேற்று அமெரிக்காவில் இருந்து, துபாய் வழியாக, சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டதில் மரபு மீறவில்லை. வீடியோவை அவர் எடுக்கவில்லை. மற்ற ஊடகங்கள் எடுத்த காணொலிதான் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர், மாற்றுத்திறனாளியின் மகளாக பிறந்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று, இப்போது ஆங்கில திறமை பெற்றவர். அவரது ஆய்வை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.எந்த ஒரு பள்ளியிலும், மாணவிகளின் தனிப்பட்ட விவகாரங்கள், பின்புலத்தை யாரும் கேட்க கூடாது. ஆனால் அந்த மாணவி தன்னைப்போல் சாதாரண ஒரு குடும்பத்தை சேர்ந்த மாணவி என்பதால், அந்த மாணவியின் அக்கா ஸ்தானத்தில் இருந்து, மாணவியோடு பேசியதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 50 நாட்கள் ஆட்சியில் நடக்கவில்லை. எங்களுடைய 5 ஆண்டுகால ஆட்சியில், உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். அதைப்போல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, 50 நாட்களில் உருவானது அல்ல. 5 ஆண்டுகளில் ஏற்பட்டது தான். தமிழ்நாட்டில், பள்ளிகளில் 3ம் வகுப்பு வரையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தகங்களில் டெக்ஸ்கள் குறைக்கப்பட்டு, வண்ண வண்ண படங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை தங்களுக்கு கீழாக பார்க்கும், எந்தவித நெருக்கடியும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க மாட்டோம். திருமாவளவனின் பேச்சை ஜனநாயகத்தின் வெளிப்பாடாக பார்க்கிறோம். தனியார் பள்ளிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும், ரூ.25 லட்சம், ரூ.40 லட்சம் கொடுத்து வந்த ஊழலை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.

அதை தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாக இருக்கக் கூடாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக கருத வேண்டும். அரசு பள்ளிகள் தான் எனது கண்கள். நான் போட்ட முதல் கையெழுத்து, அரசு பள்ளிகளில், மாணவிகளின் கழிவறைகள், மூடக்கூடிய தாழ்பாள்களுடன் இருக்க வேண்டும் என்பதுதான். அரசுப் பள்ளியின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: