மும்பை: அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 76,532 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,897 புள்ளிகளாக விற்பனையாகி வருகிறது. ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
