பொள்ளாச்சி – உடுமலை சாலையில் புதிதாக சுங்கச்சாவடி திறப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி – உடுமலை சாலையில் கோமங்கலம் புதூர் பகுதியில் புதிய சுங்கச்சாவடி திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து புதிய சுங்கச்சாவடி இன்று திறக்கப்படவில்லை.

பொள்ளாச்சி – உடுமலை இடையே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, கோமங்கலம்புதுாரில் புதிய பைபாஸ் சாலை பிரதான சாலையுடன் இணைகிறது.

பொள்ளாச்சி – உடுமலை சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன. பொள்ளாச்சி வழியாக கோவை உதகை பகுதிகளுக்கும் உடுமலை வழியாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சில் சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இன்று முதல் நெடுஞ்சாலையில் பயணிப்போரிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் உள்ளூர்வாசிகளிடமும் சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு உள்ளூர்வாசிகளும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இன்று கோமங்கலம் பகுதியில் செயல்பாட்டிற்கு வர இருந்த நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: