×

தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சென்னை: தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் இன்று(நேற்று). தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.

தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட-விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும்-சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dadha Kataimalai Sinivasan ,Udayaniti Stalin ,Chennai ,Datha Dadthaimalai Sinivasan ,Assistant Secretary ,Stalin ,Udayanithistalin ,Dravidamani Kataimalai Sinivasan ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...