- ஹிடாச்சி குழு
- போரூர்
- செங்கல்பட்டு, சென்னை
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- கைத்தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் திணைக்களம்
சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 முதல் 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு மற்றும் கூடுதலாக 1000 பேருக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அளித்திடும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி திட்டத்தின் விரிவாக்கத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இக்குழுமத்தின் துணை நிறுவனங்கள் ஆகும்.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமை செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை கூடுதல் தலைமை செயலாளர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
