- ஓ. பன்னீர்செல்வம்
- போடிநாயக்கனூர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- திமுக எம்.எல்.ஏ.
- போடி
- நாயக்கனூர்
- திமுக
- பிறகு நான்
சென்னை: போடி நாயக்கானூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஒ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தவெக சார்பில் போட்டியிட்ட எஸ்.பிரகாஷை விட 6,805 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து டி.கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், போடிநாயக்கானூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். மாவட்ட நூலக கண்காணிப்பாளராக பணியாற்றுவதை சுட்டிக்காட்டி எனது வேட்புமனுவை தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
எந்த விசாரணையும் நடத்தாமல், முறையற்ற வகையில் தனது வேட்பு மனுவை நிராகரித்ததன் மூலம், தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து தன்னை தடுத்துவிட்டனர். எனவே, போடி நாயக்கானூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
