×

தொல்லியல் துறை இயக்குநராக ஜெயசீலன் நியமனம்

சென்னை: சுற்றுலாத்துறை ஆணையர் ஜெயசீலன் தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தொல்லியல் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, சுற்றுலாத்துறை ஆணையராக பணியாற்றி வரும் ஜெயசீலன் தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jayaseelan ,Archaeological ,Department ,Chennai ,Tamil Nadu government ,Former ,Udayachandran ,Commissioner of ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை...