சென்னை: காஞ்சிபுரத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மனிதர்கள், வன விலங்குகள் மோதலை தடுக்க மின் வேலிகள், கேமராக்கள், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் வனத்துறையில் கொண்டு வரப்படவுள்ளது.
காட்டுத்தீ பரவாமல் தடுக்க ஒரு டன் கொள்ளளவுக்கு தண்ணீரை எடுத்துச் செல்லக்கூடிய அதி நவீன டிரோன்கள் உள்பட பல்வேறு கருவிகள் வனத்துறைக்கு வந்துள்ளது. இவற்றின் மூலம் தீ காட்டுப்பகுதிகளில் வேகமாக பரவுவதை விரைவாக கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக வனப்பகுதிகளில் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
