×

கர்நாடக அருகே பள்ளியின் இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம்

கர்நாடகா: பாகல்கோட் அருகே அரசு பள்ளியின் இரும்பு கதவு விழுந்து 4 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளியின் மெயின் கதவு விழுந்ததில் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே உள்ள அரசுப் பள்ளியில், இன்று திடீரென இரும்புக் கதவு இடிந்து விழுந்ததில் 4 மாணவிகள் மற்றும் பள்ளியின் உதவிப் பணியாளர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள், சுனைனா என்ற 3-ஆம் வகுப்பு மாணவி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 முறை இந்த இரும்புக் கதவு கீழே விழுந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு உள்ளே சென்றபோது, எதிர்பாராத விதமாக இந்த இரும்புக் கதவு சரிந்து விழுந்ததில் 4 மாணவிகளும், பள்ளி உதவிப் பணியாளரும் காயமடைந்தனர். பள்ளி நுழைவாயிலின் இந்த இரும்புவட்டக் கட்டமைப்பு எவ்வளவு காலமாகப் பராமரிப்பின்றிப் பலவீனமாக இருந்தது என்பது குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Bagalkot ,
× RELATED பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்;...