×

சட்டென்று மாறும் பருவநிலை உடல் நலத்தினை பாதுகாக்க ஆலோசனை

விருதுநகர், ஜூலை 6: அடிக்கடி மாறும் பருவநிலையால் உடல்நலம் பாதிப்படையாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, சித்த மருத்துவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், கடந்த சில நாட்களாக வெயில், மழை, காற்று, மாலை நேரங்களில் மேகமூட்டமான சூழ்நிலை போன்றவை நிலவி வருகின்றன. இத்திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விருதுநகரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:

பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், உணவு பழக்க வழக்கத்தாலும் நமது உடல்நிலை பல்வேறு பாதிப்பிற்கு ஆளாகின்றது. இதனை தவிர்க்க உணவில் உப்பு, புளிப்பு மற்றும் காரம் சேர்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். துவர்ப்பு மற்றும் கசப்பு அதிகம் சேர்க்க வேண்டும். உணவில் வெள்ளரி, சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட் போன்றவை அதிகம் சேர்க்க வேண்டும். கிழங்கு வகைகள் மற்றும் மாவுப்பொருட்களை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

மாதுளை ஜூஸ் வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். பார்லி கஞ்சி உட்கொள்ளலாம். அறைகளில் காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் கிரிமி நாசினியான மஞ்சளை அதிகம் கலந்து தெளிக்க வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலை தவிர்க்க இரவு நேரங்களில் முக்கால் வயிறு மட்டுமே சாப்பிட வேண்டும். இதில் மீதமுள்ள கால்பகுதி நீர் அருந்தியிருக்க வேண்டும். இரவில் வாழைப்பழம், கொய்யா மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் போன்றவற்றை நல்லது. சீரகம் கலந்த குடிநீரை எப்போதும் குடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Virudhunagar ,Palani ,
× RELATED உணவகத்தில் அதிகாரிகள் சோதனை தரமற்ற 42...