×

இந்தியா-இங்கிலாந்து இன்று 2வது டி.20 போட்டியில் மோதல்: இளம்புயல் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இல்லை?

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டி.20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் டி.20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி இன்று மான்செஸ்டரில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் தனது வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆடும் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது. ஒருவேளை ரவி பிஷ்னோய்க்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் களம் இறங்கக்கூடும்.

மறுபுறம்ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. இரு அணிகளும் இன்று டி.20ல் 32வது முறையாக மோத உள்ளன. இதற்கு முன் மோதிய 31 போட்டியில் 18ல் இந்தியா, 12ல் இங்கிலாந்து வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் இங்கிலாந்து இதுவரை 13 டி.20 போட்டியில் ஆடி 7ல் வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தியா இங்கு இங்கிலாந்துக்கு எதிராக 2ல் போட்டியில் ஆடி 1ல் வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது.

இன்றைய போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. மான்செஸ்டரில போட்டி நடைபெறும்நேரத்தில் 25 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு குறித்து, இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியதாவது: சஞ்சு உலகக் கோப்பையில் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டார். ஒரு பயிற்சியாளர் குழுவாக, தங்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பதே நியாயமான செயலாகும்,என்றார். இதன்மூலம் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும் என சூசகமாக தெரிவித்தார்.

Tags : India ,England ,T20 ,Suryavanshi ,Manchester ,cricket ,UK ,D20 ,
× RELATED உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட்...