×

வடாரண்யேஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

 

திருத்தணி: திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி சீரமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் திருவாலங்காடு வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் கோயில் நடராஜரின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என்ற சிறப்பு பெற்ற பழமையான கோயிலாகும். இக்கோயிலின் பின்புறத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சென்றாடு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாவில் தெப்ப உற்சவம் இந்த குளத்தில் வெகு விமரிசையாக நடந்தேறும். பிரசித்தி பெற்ற இக்கோயில் குளத்தில் குப்பை கழிவுகள், கழிவுநீர் கலப்பதை தடுக்க, தூர்வாரி சீரமைக்க வேண்டும். பக்தர்கள் குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சேதமடைந்துள்ள படிகளை சீரமைக்க வேண்டும். குளத்தின் உள்புறத்தில் வளர்ந்துள்ள செடி-கொடிகள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி தூய்மை உறுதிப்படுத்த திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vadaranyeswar temple ,THIRUTHANI ,DHARWARI ,VADARANYESWARAR ,TEMPLE ,THIRUWALANGAT ,Thiruvalangadu ,Vandarghali Sametha Vadaranyeswarar Temple ,Murugan ,Natarajar ,
× RELATED பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தடுப்பணை பணி 75 சதவீதம் நிறைவு